Simla Agreement: போர் அமைதிக்கான சிம்லா ஒப்பந்தம்; ரத்து செய்யப்பட்டால் என்னவாகு...
ரெட்ரோ புதிய போஸ்டர்!
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் படத்தின் புதிய அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இதனிடையே, ரெட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான கண்ணாடி பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கைகொடுத்ததா, சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் கம்பேக்? - கேங்கர்ஸ் திரை விமர்சனம்