KPY Bala: ``எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!" - KPY பாலா காட்...
ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்!
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உடல்நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்தன் காரணமாக நேற்று (செப்டம்பர் 18) இரவு அவர் காலமானார்.
இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ரோபோ சங்கரின் மறைவு செய்தியை அறிந்து மனமுடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Heartbroken to hear about Robo Shankar’s passing. Gone too soon. My condolences to his family. pic.twitter.com/reuElYIVcc
— Irfan Pathan (@IrfanPathan) September 19, 2025
கடந்த 2022 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் ரோபோ சங்கர் மற்றும் இர்ஃபான் பதான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.