ஹாக்கி மகளிரணியினருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை..! பிகார் முதல்வர் அறிவிப்பு!
ரௌடிகளின் தலைநகராக மாறிவிட்டது தில்லி: அதிஷி குற்றச்சாட்டு!
தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் வடகிழக்கு தில்லியின் சுந்தர் நகரியில் கொல்லப்பட்ட 28 வயது இளைஞரின் பெற்றோரை முதல்வர் சந்தித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குற்றவாளிகள், மிரட்டி பணம் பறிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். ரௌடிகளுக்குப் பயம் இல்லை, துப்பாக்கிச் சூடு நடத்துவது, கொலை செய்வது எனக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
காவல்துறை எதையும் செய்யாது என அவர்கள் நினைக்கிறார்கள். ரௌடிகளின் தலைநகராக தில்லி மாறிவிட்டது.
பணம் பறித்தல், கொலைகள் தினமும் நடக்கின்றன, ஆனால், உள்துறை அமைச்சருக்குத் தேர்தல் பிரசாரத்தைத் தவிர வேறு வேலை இல்லை என்று அவர் இங்குச் செய்தியாளர்களிடம் கூறினார்.