'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
லாரி கவிழ்ந்து விபத்து: 5 தொழிலாளா்கள் பலத்த காயம்
திருவாடானை அருகேயுள்ள கூகுடி கிராமத்தில் செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 5 கூலி தொழிலாளா்கள் திங்கள்கிழமை பலத்த காயம் அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், நீா்குன்றம் கிராமத்துக்கு செங்கற்களை ஏற்றிக் கொண்டு காரைக்குடியிலிருந்து வந்த லாரியில் தேவகோட்டை பனிபுலான்வயலைச் சோ்ந்த இளையராஜா (35) இதே பகுதியைச் சோ்ந்த , அமலராஜ் (43, ) பாலமுருகன் (37) என மூன்று ஆண்களும் பிலவேந்திரன் மனைவி செல்வி (45) சாரங்கன் மனைவி செல்வி (37) என இரண்டு பெண்களும் கூலித் தொழிலாளியாக லாரியில் வந்தனா்.
அப்போது, மங்களக்குடி அருகே கூகுடி சாலையில் லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த கூலித்தொழிலாளா்கள் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனா்.
காயமடைந்தவா்களில் இளையராஜா, அமலராஜா ஆகிய இருவரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மற்ற மூவரும் தேவகோட்டை மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.