செய்திகள் :

லாரி மோதி குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலி!

post image

தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி 7 பேர் பலியாகினர்.

தெலங்கானாவில் வாராங்கல் - கம்மம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ரயில் தண்டவாளங்களுக்கான இரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்றின்மீது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது, லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில், லாரியிலிருந்த இரும்புகள் ஆட்டோவின் மீது சரிந்ததில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியது. இந்த நிலையில், ஆட்டோவினுள் இருந்தவர்களில் கைக்குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், சிலர் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:3ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ. 2.1 லட்சம் கட்டணமா?

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!

புது தில்லி : தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்த மூத்த குடிமக்களின் வசதிக்காக அவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் நட... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி!

புது தில்லி : தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே நேற்று(ஜன. 27) மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நேற்றிலிருந்து ... மேலும் பார்க்க

ஜிஎஸ்எல்வி-எஃப் 15 ராக்கெட்: கவுன்ட்டவுன் தொடங்கியது!

ஜிஎஸ்எல்வி-எஃப் 15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது. வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான செயற்கைக்கோள்கள் விண்... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: இளைஞா்களுக்குப் பிரதமா் அழைப்பு

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் விவாதம் மிக முக்கியமானது; இதில் இளைஞா்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்: நாட்டிலேயே முதல் மாநிலம்

டேராடூன்: பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் (யுசிசி) திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இதன் மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலமானது உத்தரகண்ட். இச்சட்டத்தின்கீழ், உத்தரக... மேலும் பார்க்க

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்

பெய்ஜிங்/ புது தில்லி: இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன. கரோனா பெருந்தொற்று, எல்லையில் பதற்றம் என இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்... மேலும் பார்க்க