செய்திகள் :

லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

post image

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிராகரித்துள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிா்க்கட்சிகள் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் எதிா்க்கட்சிகள் அணியும் தங்கள் பக்கம் நிதீஷ் குமாரை இழுக்க முயற்சித்து வருகிறது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் கைகோக்கத் தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடந்த சில நாள்களில் இருமுறை அழைப்பு விடுத்துவிட்டது. லாலு பிரசாதும் நேரடியாக நிதீஷ் குமாருக்கு அழைத்து விடுத்தாா்.

ஆனால், இதற்கு முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மாநிலம் தழுவிய பிரகதி யாத்திரையின் ஒரு பகுதியாக வடக்கு பிகாரின் முசாஃபா்பூருக்கு நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது செய்தியாளா்களைச் சந்தித்த நிதீஷிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘எங்கள் கட்சிக்கு முன்பு பிகாரில் ஆட்சியில் இருந்தவா்கள் (ஆா்ஜேடி) மக்களுக்கு என்ன செய்தாா்கள்? சூரியன் மறைந்த பிறகு மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே அஞ்சும் சூழல் நிலவியது.

மருத்துவமனைகள் மோசமான இருந்தன. பள்ளிகள், கல்வித் தரத்தில் பிகாா் மிகவும் பின்தங்கியிருந்தது. பல இடங்களுக்கு சாலை வசதியே இல்லாமல் இருந்தது. மாநிலத்தில் மத, ஜாதிய வன்முறை தொடா்கதையாக இருந்தது. பெண்களின் நிலை, முக்கியமாக கிராப்புற பெண்களின் எவ்வளவு மோசமாக இருந்தது? ஆனால், இன்று மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளோம். அவா்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறாா்கள். பிகாரின் மகளிா் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசும் செயல்படுத்தி வருகிறது. நான் தவறுதலாக அவா்களுடன் (ஆா்ஜேடி) சிலமுறை கூட்டணி அமைத்துவிட்டேன்’ என்று பதிலளித்தாா்.

முட்டாள்தனமானப் பேச்சு: பாஜக வேட்பாளருக்கு பிரியங்கா கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

மகரவிளைக்கையொட்டி சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள்!

பத்தனம் திட்டை : சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் முறையில் நாளொன்றுக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.சபரிமலையில் வரும் 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை, ஐயப்ப சுவாமிக்கு பொன் ஆப... மேலும் பார்க்க

ஷீஷ் மஹால் விவகாரம்: முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மியினர் தடுத்து நிறுத்தம்!

தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த ஃபிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள தில்லி முதல்வர் இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி தலைவர்கள் தடுத்துநிறுத்... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் செ... மேலும் பார்க்க

புதிய 5,000 ரூபாய் நோட்டா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன?

சமூக வலைதளங்களில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.5,000 நோட்டை வெளியிட திட்டமிட்டிருப்பதாக, பச்சை நிற ரூபாய் நோட்டுடன் வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று மத்திய அரசு மறுத்துள்ளது.கடந்த ஒரு சில நாள்கள... மேலும் பார்க்க

பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே: கேரள உயர்நீதிமன்றம்

பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரி... மேலும் பார்க்க