Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
லியோனார்டோ டிகாப்ரியோவின் புதிய பட அப்டேட்!
பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ’ஒன் பேடல் ஆஃப்டர் அனதர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லெஜண்டரி இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ளார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர்ஸ் ப்ரோஸ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது.
டைட்டானிக் திரைப்படம் மூலம் உலக அளவில் இன்றும் டிகாப்ரியோ பேசப்பட்டு வருகிறார். தமிழ் டப்பிங்கில் இவரது பல படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன.
ஆஸ்கர் விருதுக்கு ஏழு முறை தேர்வாகி அதில் ஒருமுறை வென்றுள்ளார். டிகாப்ரியோ நடிப்பில் கடைசியாக 2023இல் கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் பல்வேறு முக்கியமான திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
அமெரிக்க நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தப் படம் திரையரங்குகளில் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.