செய்திகள் :

லிவ் இன் பார்ட்னர் கொலை; 40 துண்டுகளாக வெட்டிய காதலன் - அதிர்ந்த போலீஸ்

post image
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த காதலன் கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி காட்டில் வீசி எறிந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுபோன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது. ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்தில் உள்ள ஜோர்டாக் என்ற கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாய் ஒன்று மனித உடல் உறுப்பை இழுத்து வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் காட்டுக்குள் என்று விசாரித்தபோது அங்கு பெண் ஒருவர் 40 துண்டுகளுக்கும் அதிகமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்தன.

murder

அதோடு அங்கு ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆதார் கார்டு மற்றும் உடமைகள் இருந்தது. அதனைக் கைப்பற்றி அப்பெண்ணின் தாயாரிடம் விசாரித்தனர். இதில் அப்பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு தன் தாயாருக்கு போன் செய்து தன் பார்ட்னருடன் வாழ்வதற்காக ரயில் ஏறிச் செல்வதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணின் காதலன் நரேஷ் (25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் கொலையை ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் அதிகாரி அமன் குமார் கூறுகையில்,'' கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் நரேஷ் லிவ் இன் முறையில் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தான்.

இருவருக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம். நரேஷ் தமிழ் நாட்டில் சிக்கன் கடையில் கோழி இறைச்சி வெட்டும் வேலை செய்து வந்தான். இடையில் ஊருக்கு வந்தபோது தனது லிவ் இன் பார்ட்னருக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு மீண்டும் தனது லிவ் இன் பார்ட்னருடன் தமிழ் நாட்டில் சென்று வாழ்ந்து வந்தார். காதலன் திருமணம் செய்தது தெரியாமல் நரேஷுடன் வாழ்ந்த லிவ் இன் பார்ட்னர் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் தன் காதலியை தனது கிராமத்தில் தனது வீட்டிற்கு அருகில் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு வீட்டிற்கு ஆயுதங்கள் எடுத்து வந்துள்ளார்.

பின்னர் காதலியை அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு வனவிலங்குகள் இருக்கும் காட்டுக்குள் காதலியை 40க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை காட்டுக்குள் வீசியிருக்கிறான்''என்றார்.

ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; ம.பி-யில் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் போன்ற அமைப்பில் மத்தியப் பிரதேசத்தில் ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் கிராமப்புறங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், நோய்வாய்ப்... மேலும் பார்க்க

ரூ. 3,87,000 வழிப்பறி கொள்ளை; போலீஸில் பொய் புகார்... நாடகம்; நிறுவன ஊழியர் சிக்கியது எப்படி?

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் (வயது: 28). பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை கடைகளுக்கு நேரடியாக சப்ளை செய்யும் நிறுவனத்தில் பாஸ்கரன் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வ... மேலும் பார்க்க

தருமபுரி: `சாலை வசதி இல்லை' - கிடைக்காமல் போன துரித சிகிச்சை; பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் அமைந்துள்ளது. இம்மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அ... மேலும் பார்க்க

`அசைவ உணவு சாப்பிட விடாமல் காதலன் துன்புறுத்தல்?' - ஏர் இந்தியா பெண் பைலட் மும்பையில் தற்கொலை!

மும்பையில் ஏர் இந்தியாவில் பைலட்டாக இருந்தவர் சிருஷ்டி துலி (25). மும்பை மரோல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்த துலி டெல்லியை சேர்ந்த ஆதித்யா ... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதி - சோதனையில் 47 பேர் கைது; ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண், மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் சம... மேலும் பார்க்க

`பேச மறுத்தார்… போலீஸில் புகார் செய்வதாக மிரட்டினார்; கத்தியால் குத்தினேன்!' - இளைஞர் `பகீர்!'

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேல... மேலும் பார்க்க