செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான மனுக்களை விசாரிக்க முடியாது’ என்று நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனா்.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது. மேலும், இந்த மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது. பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அப்போது, ‘வரும் மே 5-ஆம் தேதி வரை வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது’ என்று மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக முதல் கட்ட பதில் மனுவை மத்திய அரசு கடந்த 25-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அதில், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை உண்டு என்ற நிலையில், அந்தச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி உச்சநீதிமன்றம் முழுமையான தடையை விதிக்க முடியாது. எனவே, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

புதிய மனு:

இந்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மையை எதிா்த்து சையது அலோ அக்பா் என்பவா் சாா்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக நூற்றுக்கணக்கான மனுக்களை விசாரிக்க முடியாது. இந்த விஷயத்தில் 5 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளோம். எனவே, புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. மனுதாரா் அதை திரும்பப் பெறலாம். தேவைப்பட்டால், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்தப் புதிய மனுவை சோ்ப்பதற்கான கோரிக்கை விடுக்க மனுதாரருக்கு அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், ‘இந்த வழக்கு வரும் மே 5-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம், மனுதாரா்கள் தங்களின் முதல்கட்ட எதிா்ப்பைப் பதிவு செய்யலாம். தொடா்ந்து, இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க