ராகுல் தடுத்து நிறுத்தம்: மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்!
வணங்கான் வெளியீட்டுத் தேதி!
வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். இதன் படப்பிடிப்பை பல நாள்களாக நடத்தி சில மாதங்களுக்கு முன் படமும் வெளியீட்டிற்குத் தயாரானது. ஆனாலும், படம் இன்னும் வெளியாகவில்லை.
டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி ஒரு சில மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதையும் படிக்க: இயக்குநர் பாலாவுக்கு விழா!
இந்த நிலையில், வணங்கான் திரைப்படம் அடுத்தாண்டு (2025) ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.