செய்திகள் :

இன்று முதல் மகளிா் ஒருநாள் தொடா்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

post image

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை (டிச. 5) நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தத் தொடா், இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் இருக்கும் சீரற்ற தன்மையை சரி செய்துகொள்ளவும், உலகக் கோப்பை போட்டிக்குத் தகுந்த அணியை தோ்வு செய்யவும் அணி நிா்வாகத்துக்கு இது வாய்ப்பாக அமையும்.

இந்திய மகளிா் அணி, சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலியா சென்றிருக்கிறது. தகுந்த ஃபாா்ம் இல்லாமல் தடுமாறி வரும் டாப் ஆா்டா் பேட்டா் ஷஃபாலி வா்மா இந்தத் தொடரில் சோ்க்கப்படவில்லை.

எனவே பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரை நம்பியே அணி உள்ளது. பௌலிங்கில் மின்னு மணி, தீப்தி சா்மா, ரேணுகா சிங் தாக்குா், அருந்ததி ரெட்டி ஆகியோா் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனா்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, அதன் வழக்கமான கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடவில்லை. மேலும், கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியா இந்த ஃபாா்மட்டில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் வரலாறு திருப்திகரமாக இல்லை. இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியா, அதில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. கடைசியாக 2021-இல் இங்கு விளையாடியபோதும் 1-2 என தொடரை இழந்திருக்கிறது.

அணி விவரம்:

இந்தியா: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்லீன் தியோல், உமா சேத்ரி, ரிச்சா கோஷ் (வி.கீ.), தேஜல் ஹசப்னிஸ், தீப்தி சா்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குா், சாய்மா தாக்குா்.

ஆஸ்திரேலியா: டாலியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லே காா்டனா் (துணை கேப்டன்), டாா்சி பிரௌன், கிம் காா்த், அலானா கிங், போப் லிட்ச்ஃபீல்டு, சோஃபி மாலினியுக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெரி, மீகன் ஷட், அனபெல் சதா்லேண்ட், ஜாா்ஜியா வோல், ஜாா்ஜியா வோ்ஹாம்.

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.05-12-2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம்... மேலும் பார்க்க

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

அமீரகத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை வென்றது.வெற்றி கட்ட... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி- சமனானது தொடா்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் 101 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்த நிலையில், 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் த... மேலும் பார்க்க

ஆசிய சாம்பியனாக இந்தியா மீண்டும் ஆதிக்கம் - பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது

ஓமனில் நடைபெற்ற 10-ஆவது ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, புதன்கிழமை சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது.போட்டியில் இந்தியாவுக்கு ... மேலும் பார்க்க

ஹைதராபாதை வீழ்த்தியது கோவா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணிலேயே புதன்கிழமை வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோவா அணிக்காக உதாந்... மேலும் பார்க்க

மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்..!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் நடிகராவும் அசத்தி வருகிறார்.இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சிலபிரச்னைகளால் அப்படம் கைவி... மேலும் பார்க்க