செய்திகள் :

வன்முறை எச்சரிக்கை: கனடா ஹிந்து கோயிலில் இந்திய தூதரக நிகழ்ச்சி ரத்து

post image

கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள திரிவேணி கோயிலில் நடைபெற இருந்த இந்திய தூதரக நிகழ்ச்சி, கனடா காவல்துறையின் வன்முறை போராட்டங்களுக்கான எச்சரிக்கையைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டது.

கனடாவில் வசிக்கும் ஓய்வூதியதாரா்களுக்கு வாழ்வு சான்றிதழ் வழங்குவதற்காக டோரண்டோவில் உள்ள இந்திய தூதரகம், திரிவேணி கோயில் வளாகத்தில் நவம்பா் 17-ஆம் தேதி சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், பீல் பிராந்திய காவல்துறையின் அறிவுறுத்தலில் இந்நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘காவல்துறை எச்சரிக்கையின்படி நிகழ்ச்சியின்போது வன்முறை போராட்டங்களுக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிவேணி கோயில் பக்தா்கள், இந்திய சமூக மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம்.

கனடாவில் ஹிந்து கோயில்களுக்கு சென்றுவர கனடா நாட்டவா்கள் பாதுகாப்பற்றவா்களாக கருதும் நிலை குறித்து மிகவும் கவலைப்படுகிறோம்.

கனடா ஹிந்து சமூகத்தினா் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீல் பிராந்திய காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தனா்.

பிராம்டன் நகரில் ஹிந்து சபா கோயிலுக்குள் கடந்த 3-ஆம் தேதி காலிஸ்தான் கொடிகளுடன் அத்துமீறி நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளா்கள், கோயிலில் இருந்த பக்தா்கள் மீது தடி, கொடிக் கம்பங்களை வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் காலிஸ்தான் ஆதரவாளா்களின் மற்றொரு பிரிவினா் கோயிலுக்கு வெளியே நின்று இந்தியாவுக்கு எதிராகவும், கோயிலுக்குள் புகுந்து தாக்கியவா்களுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனா்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவா்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுகோள் விடுத்து, இந்தியா தாக்குதலைக் கண்டித்தது. மேலும், இச்சம்பவங்களுக்குப் பிறகு கனடாவில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு பற்றி ஆழ்ந்த அக்கறையுடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கடந்த ஆண்டு கொல்லப்பட்டத்தில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இருநாட்டு ராஜீய உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

ட்ரூடோவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று இந்தியா நிராகரித்துவிட்டது. அதேபோல், கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு இடமளிப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னை என்றும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ரஷிய அதிபரை விமர்சித்த சமையல் கலைஞர் மர்ம மரணம்!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரை விமர்சித்த ரஷிய சமையல்காரர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2022 ஆம் ஆண்டிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உ... மேலும் பார்க்க

பெய்ரூட் மீது தாக்குதல்! மக்கள் வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து... மேலும் பார்க்க

4000 பேருடன் இருக்கும் சுரங்கத்தை மூடிய தென்னாப்பிரிக்க காவல்துறை! காரணம் என்ன?

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கத்திற்குள் தோண்டுபவர்களை சுரங்கத்திற்குள் வைத்தே காவல்துறையினர் சுரங்கத்தின் வாயிலை மூடியுள்ளனர்.தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதம... மேலும் பார்க்க

17,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் போயிங்?

போயிங் கோ நிறுவனமானது, தனது நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... மேலும் பார்க்க

எக்ஸ் தளத்தில் இருந்து விலகியது தி கார்டியன்

பிரிட்டன் நாளிதழ் நிறுவனமான தி கார்டியன், எக்ஸ் (முந்தைய பெயர் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் இனி எந்தச் செய்திகளையும் பகிரபோவதில்லை என்று அறிவித்துள்ளது.எக்ஸ் சமூக வலைதளத்தில் மிகக் கடுமையான வலதுசாரி சத... மேலும் பார்க்க

அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எக்ஸ் தளத்தைவிட்டு வெளியேறிய 1.15 லட்சம் பயனர்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு, எக்ஸ் செயலியை பயன்படுத்தும் 1.15 லட்சம் பயனர்கள் வெளியேறியுள்ளனர்.கடந்த 2022-ல் எக்ஸ் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க்... மேலும் பார்க்க