செய்திகள் :

வயநாடு இடைத்தேர்தல்: "என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" - ராகுல் காந்தி பிரசாரம்

post image

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சட்ட விதிகளின் அடிப்படையில் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 13 தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பிரியங்கா வேட்புமனுதாக்கல்

தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தின் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ.க., சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு தொகுதிக்கு வருகை தந்துள்ள பிரியங்கா காந்தி நேற்று (அக்டோபர் 23) வேட்புமனு தாக்கல் செய்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி இறந்தபோது சகோதரி பிரியங்கா காந்திக்கு 17 வயது. தாய் சோனியா மட்டுமின்றி மொத்த குடும்பத்திற்கும் உறுதுணையாக இருந்தார்.

பிரியங்கா வேட்புமனுதாக்கல்

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சகோதரி பிரியங்கா காந்தியை என்னுடைய இரண்டாவது தாயாக நான் பார்க்கிறேன். என்னை ஏற்றுக் கொண்டதைப் போலவே என்னுடைய இரண்டாவது தாயையும் வயநாடு மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தாய் வீட்டிற்கு வருவதைப் போல எப்போது வேண்டுமானாலும் வயநாட்டிற்கு வருவேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ - லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்' கொடுத்த டாஸ்மாக் மேலாளர்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும்,... மேலும் பார்க்க

Elon Musk vs Ambani: சாட்டிலைட் பிராட்பேண்ட் யுத்தத்தில் வெல்லப் போவது யார்?!

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தில் விடப்படாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் ... மேலும் பார்க்க

`அடையாளமும் இல்லை… அங்கீகாரமும் இல்லை…!’ - 12 ஆண்டுகளாகப் போராடும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்

``2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ` பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவட... மேலும் பார்க்க

தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா... பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

கழுகார்: `சைலன்ட் மோடு மாண்புமிகு; வேலையைத் தொடங்கிய கம்பெனி டு அண்ணன் வந்ததும் மாநாடு?’

வேலையைத் தொடங்கிய கம்பெனி!சைலன்ட் மோடில் மாண்புமிகு...மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் அந்த மாண்புமிகு, இனிமேல் எந்த வம்பு தும்பிலும் சிக்கிவிடக் கூடாது, யார் கண்ணையு... மேலும் பார்க்க

உ.பி இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்குச் சைக்கிள் சின்னம்; அகிலேஷ் ட்வீட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்ச... மேலும் பார்க்க