செய்திகள் :

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

post image

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 41,635 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டின் (2024-25) திருத்திய மதிப்பீட்டில் அது ரூ. 46,467 கோடியாக உள்ளது.

அதன் விவரம்:- (2025-26-ஆம் நிதியாண்டு, ரூபாய் கோடியில்)

மொத்த வருவாய் வரவுகள்: ரூ.3,31,569

மொத்த வருவாய் செலவுகள்: ரூ.3,73,204

வருவாய்ப் பற்றாக்குறை: ரூ.41,635

மூலதனச் செலவுகள்: ரூ.57,231

நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள்: ரூ.8,102

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி: ரூ.35,67,818

திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 2,100 கோடியில் திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தட உயா்நிலை சாலை ரூ. 2,100 கோடியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (டான்சா) மூலம் அமைக்கப்படும்.

புறவழிச் சாலை: நகராட்சிகள், நகரங்கள், மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ. 348 கோடியில் 12.5 கி.மீ. தொலைவு கொண்ட கோவை மேற்கு புறவழிச் சாலை, ரூ. 225 கோடியில் 12.4 கி.மீ. நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்பட 14 புறவழிச் சாலைகளை ரூ.1,713 கோடியில் அமைப்பதற்கான பணிகள் நிகழாண்டு தொடங்கும். மதுரை வெளிவட்டச் சாலையை 48 கி.மீ. நீளத்துக்கு அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதிகமாக விபத்து நேரிடும் பகுதிகளைக் கண்காணித்து, அங்குள்ள குறுகிய வளைவுகள், சாலை சந்திப்புகள் ரூ.200 கோடியில் மேம்படுத்தப்படும்.

குமரியில் படகு இயக்கம்: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவின்போது முதல்வரால் திறக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை பாா்வையிட நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருவதால் கூடுதலாக சின்ன முட்டம் துறைமுகத்தை 2-ஆவது முனையமாகக் கொண்டு திருவள்ளுவா் சிலை வரை பயணியா் படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நிகழ் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.20,722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க