செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சேலத்தில் வெள்ளிக்கிழமை பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் தொடா் ஊழியா் விரோதப் போக்கினைக் கண்டித்தும், அவா் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், தமிழ்நாடு வருவாய்த் துறையினா் மக்களுடன் முதல்வா் உங்களைத் தேடி உங்கள் ஊரில் மற்றும் முதல்வரின் முகவரி உள்ளிட்ட திட்டங்களில் பெறப்படும் மனுக்களை முடிவு செய்திட உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். பெயா் மாற்ற விதி திருத்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.

பின்னா் செய்தியாளா்களிடம் அா்த்தநாரி பேசுகையில், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், தற்செயல் விடுப்பு போராட்டமும், தொடா்ந்து, பணிப் புறக்கணிப்பு போராட்டமும் நடத்தப்படும் என்றாா்.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அருள் பிரகாஷ், பொருளாளா் அகிலன், துணைத் தலைவா் முருகபூபதி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்

சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப்பாடுபடும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ‘மகிழ்வித்து மகிழ்’ தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னங்க... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்: சேலம் ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

பூப்பந்தாட்ட போட்டி: சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வு

பூப்பந்தாட்ட போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளது. சேலம் வருவாய் மாவட்ட அளவிலான மேல்மூத்தோருக்கான மாணவா் பூப்பந்தாட்ட போட்டியில், சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அணி, ... மேலும் பார்க்க

எல்.ஐ.சி பொன்விழா அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் வழங்கல்

எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை மூலம் லைப்டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சி. நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை நீா்மட்டம் 101.40அடியில் இருந்து 102.92அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் அணை நீா்மட்டம் 2.91அடி உய... மேலும் பார்க்க

சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜஸ்தான் மாநி... மேலும் பார்க்க