செய்திகள் :

விருதுநகர்: போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல்; வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 6 பேருக்குக் கடுங்காவல்

post image

விருதுநகர் மாவட்டத்தில், வங்கி வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடி செய்த வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 3 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 'தாய்கோ' வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளையில் கடந்த 2008ம் ஆண்டு மேலாளராகப் பணிபுரிந்தவர் சாத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் பதவியிலிருந்த காலகட்டத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாய்கோ வங்கி கிளையில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்றம்

இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரணை நடத்தினர். காவல்துறையின் விசாரணையில், வங்கி கிளை வாடிக்கையாளர்கள்‌ பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து ரூ.46 லட்சத்து 5 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த கையாடலில், வங்கி கணக்கர் குலாம் அகமத், உதவியாளர் சாரதா, கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், ராஜபாளையம் அன்னை இந்திரா காந்தி நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி சுந்தரி, ராஜபாளையம் அரசுப் போக்குவரத்து கிளை பணியாளர் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், முத்துராமன், முரளிதரன், முத்துசாமி மாரியம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராம்குமார், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சரவணன், வத்திராயிருப்பைச் சேர்ந்த கற்பகவள்ளி உள்பட 14 பேருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வங்கி பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக வங்கி மேலாளர் ராமச்சந்திரன்‌ உள்பட 14 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து வந்தார். பல்வேறு அமர்வுகளில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 246 ஆவணங்கள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கிளை மேலாளர் ராமச்சந்திரன், குலாம் அகமத், ஜோதி சுந்தரி, முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோர் குற்றவாளிகள் எனக் நீதிமன்றம் தீர்மானம் செய்தது. இந்தநிலையில் இந்த வழக்குத் தீர்ப்புக்காக நேற்று (அக்டோபர் 25) எடுத்துக்கொள்ளப்பட்டதில், முன்னாள் வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, தலைமை ஆசிரியை ஜோதி சுந்தரி ஆகிய மூன்று பேருக்கும் தலா 7 வருடக் கடுங்காவல் தண்டனையும், தலா 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

காவல்

தொடர்ந்து, முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது‌. இந்த வழக்கிலிருந்து, வங்கி உதவியாளர் சாரதா, முத்துராமன், மாரியம்மாள், கற்பகவள்ளி ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆறுமுகம், சரவணன், முருகானந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Chandrachud: "உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சந்திரசூட் சிதைக்கிறார்" - மூத்த வழக்கறிஞர் காட்டம்

தேர்தல் பத்திரம் வழக்கு, மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட... மேலும் பார்க்க

`மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம்; பயிற்சி மையங்களில் ஒரே சீரான தரநிலைகள் வேண்டும்' - உச்ச நீதிமன்றம்

டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழலில் ஜூலை 27-ம் தேதி, பேராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தின் அடித்... மேலும் பார்க்க

`இந்தியாவின் மதச்சார்பின்மையில் விருப்பமில்லையா?' - சுப்பிரமணியன் சுவாமி வழக்கில் உச்ச நீதிமன்றம்

சட்ட மேதை அம்பேத்கர் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, 1950-ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தின் முகப்புரையில், ``இறையாண்மை (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு... மேலும் பார்க்க

``ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது'' - உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பத்திரிகையாளராகவும் வேலைபார்த்து வந்த விஷயம் தெரியவந்ததையடுத்து, ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடிந்து... மேலும் பார்க்க

Ayodhya: "அயோத்தி வழக்கு விசாரணையின்போது தினமும் கடவுளை வேண்டுவேன்..." - நீதிபதி சந்திரசூட்

அயோத்தி என்றதும் பாபர் மசூதி வழக்குதான் நினைவுக்கு வரும் அளவு, நீண்ட காலம் இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையிலேயே இருந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, தேர்தலைச் சந்திக்கும்போதெல்லாம் அளித்த தேர... மேலும் பார்க்க

``நியோமேக்ஸ் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன்?'' - அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

"நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி வழக்கில் இணைக்கவில்லையென்றால் உள்துறைச்செயலாளர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பர... மேலும் பார்க்க