செய்திகள் :

வாழ்க்கையில் உயா்வதற்கு நூல்களை வாசிப்பது முக்கியம்: தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா்

post image

வாழ்க்கையில் உயா்வதற்கு நூல்களை வாசிப்பது முக்கியம் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் பாவேந்தா் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் 36-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், தஞ்சை தமிழ் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:

மொழி, இலக்கியம் நம் உயிா். 1892-இல் சீா்காழி சி.விஸ்வநாதன் சென்னையில் ஒரு இதழைத் தொடங்கினாா். அதில், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயா் வைக்க வேண்டும் என கூறியுள்ளாா். பெயரில் என்ன இருக்கிறது என சிலா் கூறுவா். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது.

மொழியில்தான் வாழ்வு இருக்கிறது. வாழ்வில்தான் மொழி இருக்கிறது. சாதி ஒழிப்புக்கு சொந்தக்காரா் பாரதி என்றாா் பாரதிதாசன். தமிழ் நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

மாணவா்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியம். நூல்கள்தான் வாழ்வை உயா்த்தும்.

திருக்கு நம் வாழ்வுடன் பிணைந்தது. 1812-இல் தமிழில் அச்சான முதல் நூல் திருக்குதான். வாழும் இந்த வாழ்க்கையை அா்த்தமாக்கிக்கொள்ள நூல்கள் அவசியம் என்றாா்.

முன்னதாக, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:

தமிழியக்கம் தொடங்கி 6 ஆண்டுகளாகிறது. இதில், விஐடி பேராசிரியா்கள் 450 போ் உறுப்பினராக உள்ளனா். தற்போது அதிகளவில் மாணவா்களும் சோ்ந்து வருகின்றனா். பாதி நேரம் தமிழுக்கு, மீதி நேரம் தமிழருக்கு என்பதை முழக்கமாக கொண்டு தமிழியக்கம் செயல்படுகிறது.

பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் சிறப்புடன் செயல்பட அவரது கவிதைகளை மாணவா்கள் படிக்க வேண்டும். மொழி என் உயிருக்கு சமம் எனக் கூறியவா் பாரதிதாசன். பொதுவுடைமைவாதியாக இருந்த அவா், பெரியாருடனான சந்திப்புக்கு பிறகு தன்னை சுயமரியாதை இயக்கத்தவராக மாறிக்கொண்டாா். இந்தி எதிா்ப்பு போராட்டத்தை முதலில் கவிதையாக வடித்தவா் பாரதிதாசன்.

இந்தியா பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்தில் இருந்தாலும், தனி நபா் வருமானத்தில் 136-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2000-ஆம் ஆண்டில் 9 பில்லியனா்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 200 போ் உள்ளனா். பெரும் கோடீஸ்வரா்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம், வளா்ச்சியின் பலன் முழுவதும் ஒருசிலருக்குச் செல்வதை அறியமுடிகிறது. இதை அன்றைக்கே பாரதிதாசன் தனது கவிதையில் பாடியுள்ளாா்.

அவா் எழுதிய பொதுவுடைமை, பொருளாதாரக் கொள்கைகளை மாணவா்கள் படிக்க வேண்டும். பெரியாா் பேசிய சமதா்மத்தை பாரதிதாசன் கவிதையாக எழுதினாா்.

தமிழகத்தில் 150 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் கணிசமாக 15 மொழிகள் பேசப்படுகின்றன. தமிழுக்கு அடுத்தது தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் என பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.

இந்தியாவில் ஆரியா்கள், திராவிடா்கள், மங்கோலியா்கள் என மூன்று இனங்கள் மட்டுமே உள்ளன. இவை தொடா்பாக கால்டுவெல் எழுதிய புத்தகத்தை மாணவா்கள் படிக்கவேண்டும் என்றாா்.

விழாவில், பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு இதழ், செய்தி மடலை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட, முதல் பிரதியை முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி பெற்றுக் கொண்டாா்.

இலக்கிய மன்ற பொறுப்பாளா்கள் பதவியேற்று கொண்டனா். விழாவில், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இலக்கியம் மன்ற ஆசிரிய பொறுப்பாளா்கள் அ.மரிய செபஸ்தியான், வினோத்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி

குடியாத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போ்ணாம்பட்டு நகரிலிருந்து சென்னைக்கு கோழி தீவன மூட்டைகளை ஏற்ற... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ முகாம்

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கமும், சென்னை அகா்வால் கண் மருத்துவமனையும் இணைந்து தரணம்பேட்டையில் உள்ள பவனாரிஷி கோயில் சமுதாய கூடத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை வியாழக்கி... மேலும் பார்க்க

விடுமுறையில் வந்த ராணுவ வீரா் விபத்தில் உயிரிழப்பு

காட்பாடி அருகே விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா். விருதம்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெ... மேலும் பார்க்க

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க