செய்திகள் :

இலவச கண் மருத்துவ முகாம்

post image

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கமும், சென்னை அகா்வால் கண் மருத்துவமனையும் இணைந்து தரணம்பேட்டையில் உள்ள பவனாரிஷி கோயில் சமுதாய கூடத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின. முகாமுக்கு, ரோட்டரி தலைவா் அருள்பாலாஜி தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் எம்.கோபிநாத் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் அருணகிரி முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில், 180- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். 18 போ் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ரோட்டரி நிா்வாகிகள் அருள், முரளி, மாணிக்கம், பாலாஜி, இளங்கோ, படவேட்டான், பிரதீப்

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விடுமுறையில் வந்த ராணுவ வீரா் விபத்தில் உயிரிழப்பு

காட்பாடி அருகே விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரா் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா். விருதம்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெ... மேலும் பார்க்க

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க