செய்திகள் :

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

post image

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரா் அன்மோல் பிஷ்னோய் பஞ்சாபின் ஃபசில்கா பகுதியைச் சோ்ந்தவா்கள். மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகா் சல்மான் கானின் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடா்புடைய, அன்மோல் பிஷ்னோய் என்ஐஏ அமைப்பால் தேடப்பட்டு முக்கிய பயங்கரவாதி பட்டியலில் இருக்கிறாா்.

மகாராஷ்டிரத்தில் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த கடந்த அக். 12-ஆம் தேதி கொல்லப்பட்டாா். இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஒப்புக்கொண்டது.

இந்த இரு வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் அன்மோல் பிஷ்னோய், கனடாவில் வசிப்பதாகவும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு பயணங்கள் மேற்கொள்வதாகவும் கடந்த மாதம் என்ஐஏ தெரிவித்தது.

இது தவிர, தேசிய தலைநகா் தில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்களைச் செய்ய இளைஞா்களை ஒன்றிணைப்பது மற்றும் நிதி திரட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட 9 போ் மீது என்ஐஏ கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தில் உள்ள சபா்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தலைமறைவாக இருக்கும் அன்மோல் பிஷ்னோய் என்ஐஏவால் தேடப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அவா் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்ஐஏ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க

காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் ... மேலும் பார்க்க