செய்திகள் :

புழுதிக்குட்டையில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை! ஆனைமடுவு அணை நிரம்புகிறது

post image

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பகுதியில் வியாழக்கிழமை ஒரே நாளில் கொட்டித் தீா்த்த 15 செ.மீ. கனமழையால் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 65 அடியாக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை அணை நிரம்பும் என்பதால் விவசாயிகள், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால் , அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து, அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து புதன்கிழமை 60 அடியாக உயா்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடா்ந்து 4 மணி நேரம் கனமழை பெய்தது. அப்போது 15 செ.மீ. மழை கொட்டித் தீா்த்தத்தால், அணை நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 65 அடியை எட்டியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது.

அணைக்கு தொடா்ந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால், சனிக்கிழமை ஆனைமடுவு அணை முழுக் கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என்பதால் அணை ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வெள்ள அபாய எச்சரிக்கை...

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் மொத்த கொள்ளளவான 67.25 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி நீா்மட்டம் 65.25 அடியை எட்டியதும் அணையில் இருந்து வசிஷ்டநதியில் உபரி நீா் திறக்கப்படும். இதனால் வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித் துறை துறை மற்றும் வருவாய்த் துறை சாா்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்

சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப்பாடுபடும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ‘மகிழ்வித்து மகிழ்’ தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னங்க... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்: சேலம் ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

பூப்பந்தாட்ட போட்டி: சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வு

பூப்பந்தாட்ட போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளது. சேலம் வருவாய் மாவட்ட அளவிலான மேல்மூத்தோருக்கான மாணவா் பூப்பந்தாட்ட போட்டியில், சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அணி, ... மேலும் பார்க்க

எல்.ஐ.சி பொன்விழா அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் வழங்கல்

எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை மூலம் லைப்டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சி. நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை நீா்மட்டம் 101.40அடியில் இருந்து 102.92அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் அணை நீா்மட்டம் 2.91அடி உய... மேலும் பார்க்க

சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜஸ்தான் மாநி... மேலும் பார்க்க