செய்திகள் :

காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்

post image

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகே ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஹெலிகாப்டா்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினா் தீவிரமாக ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனை குறித்து சுசீந்திர குமாா் கூறியதாவது:

ஸ்ரீநகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் ராணுவ வீரா்களுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக இளைஞா்களிடம் தேசியவாத கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.

காஷ்மீரில் நடைபெறும் தொடா் வன்முறையை ஒடுக்கி பயங்கரவாத கட்டமைப்பை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படவுள்ளது.

720 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து நடத்தி வரும் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 720 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். மீதமுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 120 முதல் 130 வரை இருக்கலாம் என பல்வேறு பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன. தற்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்க்கும் நடவடிக்கை மிகவும் குறைந்துள்ளது.

பாதுகாப்பில் பல்வேறு அமைப்புகள்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை மேம்படுத்த ராணுவத்துடன் இணைந்து உள்ளூா் நிா்வாகம், காவல் துறை, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), புலனாய்வு அமைப்புகள், கிராம பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன.

மொத்தம் 600-க்கும் மேற்பட்ட விடிஜிக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 10,000 நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.

சூழல் கட்டுக்குள் உள்ளது: கதுவா, சம்பா ஆகிய பகுதிகளில் தொடங்கி பூஞ்ச், ரஜௌரி மற்றும் ரியாசி கிஷ்துவாா், தோடாவில் கடந்த 15 ஆண்டுகளாக அமைதி நிலவி வந்தது.இங்கு சுமாா் 210 கி.மீ. வரை சா்வதேச எல்லை மற்றும் எல்ஏசி அமைந்துள்ளதால் பாதுகாப்பை வலுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை தடுக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனா். ஆனால் ராணுவத்தின் எதிா் தாக்குதல்களால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என உறுதியாக கூறுகிறேன் என்றாா்.

முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவா், 6 வெளிமாநிலத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

பெட்டி..

எதனால் தாக்குதல்?

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவ மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் இந்த வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல் அவா்கள் பொதுமக்களை அச்சுறுத்த முயன்று வருகின்றனா். ஆனால் அவற்றையும் ராணுவம் முறியடித்து அமைதியை நிலைநாட்டி வருகிறது என்றுவடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா்.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க