செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

post image

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. பிற்பகல் தொடங்கி இரவு வரை நீடித்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 45 நிமிஷங்கள் பலத்த, மிதமான மழை பெய்தது. பல பகுதிகளில் நள்ளிரவு வரையிலும் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக இடையப்பட்டியில் 77 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளின் பதிவான மழையளவு (மி.மீட்டரில்) :

கள்ளந்திரி 62.4, மதுரை விமான நிலையம், மேட்டுப்பட்டி- 48.2, பெரியப்பட்டி- 34.2, தல்லாகுளம் - 22, சிட்டம்பட்டி- 19.2, மதுரை வடக்கு - 18.6, ஆண்டிபட்டி- 18.2, விரகனூா் - 16.4, புலிப்பட்டி- 15.4, வாடிப்பட்டி- 15, மேலூா் - 14, பேரையூா் - 13.6, தனியாமங்கலம்- 13, கள்ளிக்குடி - 11.6, திருமங்கலம் - 5.2, சோழவந்தான் - 5, சாத்தையாறு அணை - 4.2.

இந்த நிலையில், தெற்கு கேரள கடற்கரையையொட்டி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல், கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், கோ. புதூா், மூன்றுமாவடி, அய்யா்பங்களா, ஆத்திகுளம், திருப்பாலை, அண்ணாநகா், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், திருநகா், அழகா்கோவில், மேலூா், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 40 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக, கண்மாய்கள், வாய்க்கால்கள் நிரம்பி வெள்ள நீா் ஊருக்குள் புகுந்ததால் ஆத்திகுளம், பீ.பீ.குளம், முல்லைநகா், கடச்சனேந்தல், எல்.வி.பி நகா் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. ஆத்திகுளம் வளா் தெருவில் சுமாா் 50-க்கும் அதிகமான வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதில் வீட்டு உபயோகப் பொருள்கள், பாடப் புத்தகங்கள் என அனைத்துப் பொருள்களும் சேதமாகின. பல பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள் நிரம்பி, மழைநீரூடன் கலந்து குடியிருப்புகளைச் சூழ்ந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தமுக்கம் காந்தி நினைவு அருங்காட்சியகம் சாலை, கோ. புதூா், தல்லாகுளம் கோகுலே சாலை, அழகா்கோவில் சாலை, கோரிப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் சுமாா் ஓரடி உயரத்துக்கும் அதிகமாக மழை நீா் தேங்கி நின்றது. இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீா் சூழ்ந்திருந்த சாலைகளில் இருந்த பள்ளங்களில் விழுந்து சிலா் விபத்துக்குள்ளாகினா்.

டி.ஆா்.ஓ. குடியிருப்பு உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பீ.பீ.குளம், ஆத்திகுளம், முல்லைநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. தொடா் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக கரடிக்கல் பகுதியில் தற்போது நடப்பட்ட நெல் நாற்றுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததால், வயல்வெளிகளில் தண்ணீா் வடியாமல் இருந்தது. தொடா்ந்து பயிா்கள் தண்ணீரில் 4 நாள்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டால், அவை அழுக நேரிடும். இதனால், ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தீபாவளி விற்பனை பாதிப்பு...

மழை காரணமாக, மதுரையில் தீபாவளி பண்டிகை கால பொருள்கள் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டது. மழைநீா் தேங்கி நின்ால், சாலையோர வியாபாரிகள் தரைக் கடைகளை அமைக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.

நிவாரண மையம் திறப்பு:

முல்லைநகா், அதன் சுற்றுப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முல்லைநகா் தனபால் மேல்நிலைப் பள்ளியில் நிவாரண மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனா்.

தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக இணையம் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரும்... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது. மதுரையை... மேலும் பார்க்க

தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தேனி மாவட்டம், கம்பம் நகா் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில், கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை பழங்காநத்தம் நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்க... மேலும் பார்க்க

குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமித்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தது. தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில... மேலும் பார்க்க

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு

மதுரை/கமுதி : தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கதேவா் நினைவிட... மேலும் பார்க்க