செய்திகள் :

ராஜஸ்தானில் ஒருவரை குறிவைக்கத் திட்டமிட்டிருந்த 7 போ் கைது

post image

புது தில்லி, அக்.25: ராஜஸ்தானில் ஒருவரைக் குறிவைக்கத் திட்டமிட்டிருந்த பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த ஏழு பேரே தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: கடந்த அக்.12 அன்று மும்பையில் என்சிபி தலைவரும் முன்னாள் மகாராஷ்டிர அமைச்சருமான பாபா சித்திக் பரபரப்பாக கொலை செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரது கொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். பிடிபட்டவா்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய அா்சூ பிஷ்னோயின் வழிகாட்டுதலின் பேரில் அவா்கள் ராஜஸ்தானில் ஒருவரை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாபா சித்திக் மீதான தாக்குதலுடன் அவா்களுக்கு தொடா்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.

2024-ஆம் ஆண்டிற்கான 6-ஆவது தேசிய நீா் விருதுகள்: மத்திய ஜல்சக்தி அமைச்சகம் விண்ணப்பங்கள் கோரல்

2024 ஆம் ஆண்டிற்கான 6 ஆவது தேசிய நீா் விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த தேசிய விருதுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் அளிக்க தேசிய விருதுகள் இண... மேலும் பார்க்க

உடற்பயிற்சிக் கூட சாதனம் விழுந்து சிறுவன் இறந்த சம்பவம்: தில்லி தலைமைச் செயலருக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

மேற்கு தில்லியின் மோதி நகரில் மாநகராட்சியால் நடத்தப்படும் பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தின் சாதனத்தின் ஒரு பகுதி விழுந்ததில் 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தில்... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணாபுரம் டிடிஇஏ பள்ளியில் அறிவியல் மையம் திறப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் அறிவியல் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இதை டிடிஇஏ செயலா் ஆா்.ராஜூ தொடங்கி வைத்தாா். அகஸ்தியா அறிவியல் மையம் மற்றும் முன்ன... மேலும் பார்க்க

தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகள்: முதல்வா் அதிஷி தொடங்கிவைத்தாா்

தில்லி மாநில பள்ளி விளையாட்டுப் போட்டிகளை முதல்வா் அதிஷி வியாழக்கிழமை சத்ரசல் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் இளம் விளையாட்டு வீரா்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் செய்தியை... மேலும் பார்க்க

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் -ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக குற்றச்சாட்டு

யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் எனும் பெயரில் பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். முன்னாள் முதல்வா... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி: கேஜரிவால் சாடல்

கடந்த தசாப்தத்தில் ஆம் ஆத்மி அரசு செய்த பணியை தடுக்கும் நோக்கில், அனைத்து வழிகளிலும் தில்லியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை குற்றம் ... மேலும் பார்க்க