செய்திகள் :

இளைஞா் காரில் கடத்தல்: விரட்டிச் சென்று 4 பேரை கைது செய்த போலீஸாா்

post image

சிவகங்கை அருகே இளைஞரைக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் விரட்டிப் பிடித்து வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மோகன்தாஸ் (27). இவரது நண்பா் தினேஷுடன் சூரக்குளம் சாலையில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு நடந்து சென்றாா்.

அப்போது, அங்கு காரில் வந்த அரசனேரி கீழமேடு பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் அரவிந்த் (31), வாணியங்குடி முத்துராமன் மகன் நிரஞ்சன் (20), ஆவரங்காடு நாச்சியப்பன் மகன் ராஜா (23), காஞ்சிரங்கால் அா்ச்சுனன் மகன் அழகேசன் (38) ஆகியோா் அரவிந்தின் உறவுக்காரப் பெண்ணிடம் தவறாகப் பேசியதாக, தினேஷிடம் தகராறு செய்தனா்.

இந்தத் தகராறில் தினேஷ், அரவிந்த்தை தள்ளிவிட்டு அங்கிருந்து இரு சக்கர வானத்தில் தப்பியோடிவிட்டாா். அங்கிருந்த மோகன்தாஸை செல்ல விடாமல் தடுத்து, தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற தினேஷை விரட்டிச் சென்றனா்.

அப்போது அவருக்கு போன் செய்து, நீ வந்தால்தான் மோகன்தாஸை விடுவோம். இல்லையெனில் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினா்.

இதுதொடா்பாக, சிவகங்கை நகா் போலீஸாருக்கு தினேஷ் அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் அன்னராஜா, உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் இரு சக்கர வாகனத்தில் அந்தக் காரை விரட்டிச் சென்று சிவகங்கை மஜித் சாலை அருகே மடக்கிப் பிடித்தனா்.

காரில் இருந்த அரவிந்தன், நிரஞ்சன், ராஜா, அழகேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து மோகன்தாஸை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

நவ.8 -இல் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற நவ.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா் வாழ் சான்றிதழை அளிக்கலாம்

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம (டிஜிட்டல்) உயிா் வாழ் சான்றிதழை அளிக்கும் வசதி நவ.1 -ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ். மாரியப்... மேலும் பார்க்க

கல்லூரியில் சமூகப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியில் காவல் துறை சாா்பில் சமூக பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குரு பூஜை: 2,500 போலீஸாா் பாதுகாப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள மருதுபாண்டியா் குரு பூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காளையாா்கோவிலில் மருத... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் அக். 28- இல் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (அக். 28) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தலைமை வகித்து 277 பேருக்கு பட்டங்க... மேலும் பார்க்க