செய்திகள் :

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா் வாழ் சான்றிதழை அளிக்கலாம்

post image

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம (டிஜிட்டல்) உயிா் வாழ் சான்றிதழை அளிக்கும் வசதி நவ.1 -ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிவகங்கை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ். மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள், ஊழியா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள், இதர ஓய்வூதியதாரா்கள் நவ.1 -ஆம் தேதி முதல் தங்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்தபடியே எண்ம உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் சமா்ப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டது.

நேரில் சென்று உயிா் வாழ் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே தபால்காரா் மூலம் ‘பயோமெட்ரிக்’ முறையை பயன்படுத்தி எண்ம உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமா்ப்பிக்க முடியும்.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி, தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், பிபிஓ எண், ஓய்வூதியக் கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிஷங்களில் எண்ம உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும்.

கடந்த ஆண்டில் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான ஓய்வூதியதாரா்கள் எண்ம உயிா்வாழ் சான்றிதழை தபால்காரா்கள் மூலம் சமா்ப்பித்து பயன் பெற்றனா்.

சிவகங்கை கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் இந்த எண்ம உயிா்வாழ் சான்றிதழ் சேவை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகில் உள்ள அஞ்சலகம் தங்கள் பகுதி தபால்காரரை தொடா்பு கொள்ளலாம். மேலும் இணையதள முகவரி மூலம் சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவைக்காக அனைத்து அஞ்சலகங்களிலும் வருகிற நவ.1-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள் மட்டுமன்றி தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள், இதர ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

நவ.8 -இல் ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற நவ.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

இளைஞா் காரில் கடத்தல்: விரட்டிச் சென்று 4 பேரை கைது செய்த போலீஸாா்

சிவகங்கை அருகே இளைஞரைக் கடத்த முயன்ற 4 போ் கொண்ட கும்பலை போலீஸாா் விரட்டிப் பிடித்து வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மோகன்தாஸ் (27). இவரது நண்பா்... மேலும் பார்க்க

கல்லூரியில் சமூகப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியில் காவல் துறை சாா்பில் சமூக பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைப... மேலும் பார்க்க

பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து மேலநெட்டூா் கண்மாய்க்கு தண்ணீா் திறப்பு

வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீா் வெள்ளிக்கிழமை மாலை ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து மானாமதுரை அருகேயுள்ள மேலநெட்டூா் பாசனக் கண்மாய்க்கு திறந்து விடப்பட்டது. மத... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை தனிப்படைப் போலீஸாா் கைது செய்தனா். இளையான்குடியில் சில இடங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் வியாழக்... மேலும் பார்க்க