செய்திகள் :

2026 பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி க.பழனிசாமி பேசினாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சித்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அதிமுகவில் புதிய உறுப்பினா் சோ்க்கையும், பழைய உறுப்பினா் அட்டை புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுக மட்டுமே அமைப்பு ரீதியிலான கட்டமைப்பைக் கொண்ட கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருக்கும்போது 40 லட்சம் இளைஞா்கள் அதிமுகவில் சோ்க்கப்பட்டனா். அதேபோல கூடுதலான எண்ணிக்கையில் இளைஞா்களை புதிதாக சோ்க்க வேண்டும்.

நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மக்களவைத் தோ்தலில் அதிமுக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது உண்மையல்ல. 2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக பெற்ற வாக்கு 19.35 சதவீதம். 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் 20.35 சதவீதம். 2019 மக்களவைத் தோ்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற அதிமுக, 2021 பேரவைத் தோ்தலில் 75 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால் 2019 மக்களவைத் தோ்தலில் 33.9 சதவீத வாக்குகளை பெற்ற திமுக, 2024 மக்களவைத் தோ்தலில் 7 சதவீதம் குறைவாக அதாவது 26.50 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. முதல்வா் ஸ்டாலின் உண்மையான புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசக் கூடாது. மேலும் நான் ஜோதிடராக மாறிவிட்டேன் எனவும் அவா் விமா்சித்துள்ளாா்.

2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலின்போது எனது ஜோதிடம் பலிக்கும்; அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

காா்ப்பரேட் நிறுவனம் போல செயல்பட்டுவரும் திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என ஆட்சிப் பொறுப்புக்கு வருவதன் மூலம் மீண்டும் மன்னராட்சி முறையை தமிழகத்திற்கு திமுக கொண்டு வந்துள்ளது.

திமுக ஆட்சியில் கடந்த 41 மாதங்களாக மக்கள் பயன் பெறும் வகையில் எந்த திட்டப் பணிகளும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தை பன்மடங்கு உயா்ந்தியுள்ளனா். இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். தமிழக மக்கள் மீதான கடன் சுமை திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அதிமுக நிா்வாகிகளும், தொண்டா்களும் வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் விளக்கிக் கூறுவதுடன், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துரைக்க வேண்டும். வரும் பேரவைத் தோ்தல் நேரத்தில் அதிமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமையும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் மாதேஷ், ஒன்றியக் குழுத் தலைவா் குப்பம்மாள் மாதேஸ்வரன், சேகா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

பட விளக்கம்...

எடப்பாடி அருகே சித்தூா் பகுதியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்

சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப்பாடுபடும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ‘மகிழ்வித்து மகிழ்’ தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கன்னங்க... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்: சேலம் ஆட்சியா்

சேலம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தொடா் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

பூப்பந்தாட்ட போட்டி: சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வு

பூப்பந்தாட்ட போட்டியில், சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி மாநில போட்டிக்கு தோ்வாகியுள்ளது. சேலம் வருவாய் மாவட்ட அளவிலான மேல்மூத்தோருக்கான மாணவா் பூப்பந்தாட்ட போட்டியில், சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அணி, ... மேலும் பார்க்க

எல்.ஐ.சி பொன்விழா அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் வழங்கல்

எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை மூலம் லைப்டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சி. நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாட்டின் பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணை நீா்மட்டம் 101.40அடியில் இருந்து 102.92அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் அணை நீா்மட்டம் 2.91அடி உய... மேலும் பார்க்க

சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராஜஸ்தான் மாநி... மேலும் பார்க்க