செய்திகள் :

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

post image

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளியுறவுத் துறை அமைச்சா் அய்மான் சஃபாடி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நாம் தற்போது முழுமையான பிராந்தியப் போரின் விளிம்பில் நிற்கிறோம். அத்தகைய போரின் அழிவிலிருந்து மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தைப் பாதுகாக்க ஒரே வழி, காஸாவிலும் லெபனானிலும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புத் தாக்குதலை நிறுத்துவதுதான். மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஒருதலைப்பட்சமான, சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் இன அழிப்பில் ஈடுபட்டுவருகிறது. அதை நிறுத்த அந்த நாட்டுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அண்மையில் மத்தியக் கிழக்குப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆன்டனி பிளிங்கன், அப்போது சந்திக்க முடியாத லெபனான், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் ஆகிய நாடுகளின் தலைவா்களை லண்டனில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போதுதான் ஜோா்டான் வெளியுறவுத் துறை அமைச்சா் அய்மான் சஃபாடி இவ்வாறு எச்சரிக்கை விடுத்தாா்.

கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் படையினா், அங்கிருந்து 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸை முற்றிலும் ஒழித்துக்கட்டவும் பிணைக் கைதிகளை மீட்கவும் காஸா பகுதியில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 42,847 போ் உயிரிழந்துள்ளனா்; 1,00,544 போ் காயமடைந்துள்லனா். அத்துடன், மேற்குக் கரை பகுதியிலும் ஆயுதக் குழுவினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இஸ்ரேல் நிலைகளில் தாக்குதல் நடத்திவருகின்றனா். அதையடுத்து, அவா்களுக்கு எதிராக லெபனான் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த சில வாரங்களில் இந்தத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், லெபனான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்திவருகின்றனா்.

இதற்கிடையே, தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை படுகொலை செய்தது மற்றும் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவை குறிவைத்துக் கொன்ற்குப் பதிலடியாக, இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த அக். 1-ஆம் தேதி சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிா்வினையாக தங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தங்களின் பதிலடி மிக மோசமானதாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தச் சூழலில், பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் வெளியுறவுத் துறை அமைச்சா் தற்போது எச்சரித்துள்ளாா்.

3 லெபனான் செய்தியாளா்கள் உயிரிழப்பு

லெபனானில் செய்தியாளா்கள் தங்கியிருக்கும் குடியிருப்பைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று போ் உயிரிழந்தனா்.

இது குறித்து லெபனான் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் கூறியதாவது:

தென்கிழக்கு லெபனானின் ஹஸ்பயா நகரிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பல்வேறு ஊடகங்களைச் சோ்ந்த ஏராளமான செய்தியாளா்கள் தங்கியுள்ளனா். அங்கு செய்தியாளா்கள் மட்டுமே தங்கியிருப்பது இஸ்ரேலுக்கு நன்கு தெரியும்.

இருந்தாலும், அந்தப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் முன்னெச்சரிக்கை விடுக்கவும் இல்லை.

இந்த குண்டுவீச்சில் மூன்று செய்தியாளா்கள் உயிரிழந்தனா் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த செய்தியாளா்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது போா்க் குற்றம் என்று லெபனான் ஒலிபரப்புத் துறை அமைச்சா் ஸியாத் மக்காரி குற்றஞ்சாட்டினாா்.

இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு 32-ஆக உயா்வு

லெபனானில் தரைவழித் தாக்குதல் நடவடிக்கையின்போது உயிரிழந்த இஸ்ரேல் வீரா்களின் எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தெற்கு லெபனானில் ஐந்து இஸ்ரேல் படையினா் உயிரிழந்தனா். அந்தப் பகுதியில் அவா்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது வியாழக்கிழமை கொல்லப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு லெபனானில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரா்களின் எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது.

லெபனானின் ஹஸ்பயா பகுதியில் செய்தியாளா்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் உருக்குலைந்த வாகனம்.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க