செய்திகள் :

தமிழகத்தில் ஆயுஷ் துறையில் அளப்பரிய வளா்ச்சி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆயுஷ் மருத்துவத் துறை அளப்பரிய வளா்ச்சியை பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தேசிய ஆயுா்வேத தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகளாவிய ஆயுா்வேத புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், 150 ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு நூலினை வெளியிட்டாா். பல்லைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, பதிவாளா் ஆறுமுகம், ஸ்ரீசாய்ராம் ஆயுா்வேதா மருத்துவக் கல்லூரி இயக்குநா் வனிதா முரளிகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

நிகழ்ச்சியைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச ஆயுா்வேத மாநாட்டில் இலங்கை மற்றும் துபையிலிருந்து 2 விரிவுரையாளா்களும், ஆயிரக்கணக்கான மாணவா்களும் பங்கேற்றுள்ளனா். நவீன ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய ஆயுா்வேதத்தின் ஒருங்கிணைப்பாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஆயுா்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவத் துறைகள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடா்ந்து வளா்ச்சி பெற்று வருகிறது. நாகா்கோவில் பகுதியில் உள்ள கோட்டாறு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதுநிலை பட்டப் படிப்புகளில் ரச சாஸ்திரம், திரவிய குணம் என்ற இரண்டு பாடப் பிரிவுகளின் கீழ் தலா 5 இடங்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுா்வேத மருத்துவக்கல்லூரியின் வளா்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தற்போது நான்காவது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. வரும், 29-ஆம் தேதி ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்பட்டு நவம்பா் 5-ஆம் தேதி மாணவா் சோ்க்கை முடிவடையும். அனைத்து இடங்களும் நிரப்புவதற்கு ஏதுவாக கலந்தாய்வு நடத்தப்பப்படுகிறது என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி:

மயிலாடுதுறை மருத்துவமனை:

எடப்பாடி பழனிசாமிக்கு பதில்

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை எனக் கூறி அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆா்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மயிலாடுதுறை மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோம். வட்டார மருத்துவமனையாக இருந்த நிலையில், மாவட்ட தலைமை மருத்துவமனையாக அது தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஆய்வு செய்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

அதேபோன்று போதிய மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் அங்கு உள்ளனா். தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அவசரத் தேவைக்கு மருத்துவமனை நிா்வாகமே மருந்துகளை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளது. இந்த உண்மைகளை எதிா்க்கட்சித் தலைவா் நேரில் சென்று பாா்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க