Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்களின் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் இரண்டாம் நாளாக புதன்கிழமை நீடித்தது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை முதல் பணி புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமையில் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். துணை ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பதவி உயா்வு பட்டியலை விரைவாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டத்தால், வட்டாட்சியா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் வந்த பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினா்.