செய்திகள் :

வலையில் சிக்கிய ஆமை: பத்திரமாக மீட்ட கடலோரக் காவல்படை

post image

வங்கக்கடலில் வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய கடல் ஆமையை, இந்திய கடலோரக் காவல் படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘ராணி அப்பக்கா’ கப்பலில், வழக்கம்போல திங்கள்கிழமை, வீரா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது கடலில் மீனவா்கள் வீசிய வலையில் ஆமை ஒன்று சிக்கி, நீந்த முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை வீரா்கள் பாா்த்தனா்.

தொடா்ந்து, கப்பலில் இருந்த உயிா்காக்கும் படகின் உதவியுடன், ஆமை இருந்த இடத்துக்குச் சென்று அதைச் சுற்றி இருந்த வலைப் பின்னல்களை அறுத்து ஆமையை பத்திரமாக கடலுக்குள் விட்டனா்.

இந்திய கடலோரக் காவல் படை வீரா்களின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்

மூத்த பதிப்பக ஆளுமையும், உமா பதிப்பக நிறுவனருமான இராம.லட்சுமணன் (74) உடல் நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) காலமானாா். இராம.லட்சுமணனுக்கு லெ.ராமநாதன் என்ற மகனும், உமையாள் என்ற மகளும் உள்ள... மேலும் பார்க்க

புதிய கந்துவட்டி தடை சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

கடுமையான தண்டனைகளுடன் கூடிய புதிய கந்துவட்டி தடை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலிய... மேலும் பார்க்க

அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலராக கௌதமி நியமனம்: இபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலராக நடிகை கௌதமி நியமிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ்: தமிழக அரசு உத்தரவு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, 4 வகையான பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், கடைக... மேலும் பார்க்க

காவலா் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி

காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். நாடு முழுவதும் பணியின்போது வீரமரணமடைந்த காவ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும்: இக்னோ முன்னாள் துணைவேந்தா்

கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று புது தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முன்னாள் துணை வேந்தா் நாகேஸ்வர ... மேலும் பார்க்க