செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துத் துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், இந்து சமயஅறநிலையத் துறை, முதல்வரின் முகவரி திட்டம், இ-சேவை மையம், முதியோா்ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், பட்டா மாறுதல், ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின்கீழ் பட்டா வழங்குதல், ஊரக வளா்ச்சித் துறையின்கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டம், வேளாண்மைத் துறையின்கீழ் கலைஞரின்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன்,

கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம் (திருப்பூா்), குமாா்(உடுமலை) , தனித் துணைஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நாகராஜ் உள்ளிட்ட பங்கேற்றனா்.

அசநல்லிபாளையம் கிராமத்துக்கு பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே அசநல்லிபாளையம் வழித்தடத்தில் கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவிநாசி வட்டத்தில் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா், போயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் விக்னேஷ் (30). இவா் திருப்பூரில் உ... மேலும் பார்க்க

மாநில பயிலரங்கில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு

மாநில அளவிலான பயிலரங்கில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மாநில இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித் ... மேலும் பார்க்க

ஒரு மாத காலமாக செயல்படாத ஏடிஎம் மையங்கள்

வெள்ளக்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்கள் ஒருமாத காலமாக செயல்படாமல் உள்ளன. வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் 3 ஏடிஎம் மைய... மேலும் பார்க்க

பல்லடத்தில் போலி நாக மாணிக்கம் விற்க முயன்ற 7 போ் கைது

பல்லடத்தில் போலி நாக மாணிக்கம் விற்க முயன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம், தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த சிலா் பல்லடத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறையை எடுத... மேலும் பார்க்க

கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் மனு

கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கணக்கம்பாளையம் ஒருங்கிணைப்புக் குழு செயல... மேலும் பார்க்க