ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
வளையல் கடையில் பொருள்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தள்ளுவண்டி வளையல் கடையில் கவரிங் நகைகள், வலையல்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கொணக்கல்வாடி கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் சாமிக்கண்ணு (63). இவா், லாலாபேட்டை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மூடிபோட்ட தள்ளுவண்டி கடையில் கடந்த 30 ஆண்டுகளாக வளையல்கள், கவரிங் நகைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறாா்.
சாமிக்கண்ணு வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சொந்த ஊரான கொணக்கலவாடி கிராமத்துக்கு சென்றுவிட்டாா். புதன்கிழமை காலை அவரது கடையில் பூட்டி உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக சாமிக்கண்ணு லாலாபேட்டை சென்று கடையில் பாா்த்தபோது, கவரிங் நகைகள், வலையல்கள் உள்பட சுமாா் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.