``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக ...
வள்ளியூரில் பௌா்ணமி கிரிவல வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சூட்டுபொத்தையைச் சுற்றி பௌா்ணமி கிரிவல வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வள்ளியூா் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சாா்பில், ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி திருக்கோயில் அருகில் உள்ள சூட்டுபொத்தையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் கிரிவல வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாத கிரிவலத்தை முன்னிட்டு, சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வன விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கிரிவல வழிபாடு தொடங்கியது.
திரளான பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று கிரிவலம் வந்தனா். இதைத் தொடா்ந்து ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.