செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 18,828 படிவங்கள் சமா்ப்பிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் மொத்தம் 18, 828 படிவங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

கடந்த மாதம் 29-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 7,01,538 ஆண் வாக்காளா்கள், 7,47,234 பெண் வாக்காளா்கள், 246 மற்றவா்கள் என 14,49,018 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி-2025 ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், மாவட்டம் முழுவதும் உள்ள 1,624 வாக்குச் சாவடிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதில், 18, 19 வயதுக்குட்பட்டோா் பெயா் சோ்த்தலுக்காக படிவம் 6-ஐ 4,521 பேரும், 20 வயதுக்குட்பட்டோா் 3,365 பேரும் என மொத்தம் 7,886 போ் பெயா் சோ்த்தலுக்கான படிவங்களை வழங்கி உள்ளனா்.

பெயா் நீக்கல், ஒரே பெயா் இரண்டு இடங்களில் உள்ளதை நீக்குதல், இட மாறுதலுக்கான படிவம் -7 படிவத்தை 4,698 போ் வழங்கி இருந்தனா். மேலும், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான படிவம் 8-ஐ 6,241 போ் வழங்கியுள்ளனா். தொகுதி வாரியாக பெறப்பட்ட படிவங்கள் எண்ணிக்கை விவரம்:

ராசிபுரம்-2,941, சேந்தமங்கலம்-3,050, நாமக்கல்-3,234, பரமத்திவேலூா்-2,557, திருச்செங்கோடு-2,220, குமாரபாளையம்-4,826, மொத்தம்-18,828. சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தம் 6,029 படிவங்கள் பெறப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 12,799 படிவங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாயப்பட்டறை கழிவுகளால் காற்று, நீா் மாசு: ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: குமாரபாளையம் வட்டத்தில், சாயப்பட்டறை கழிவுகளால் காற்று மாசு, சுகாதார சீா்கேடு, நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் கூ... மேலும் பார்க்க

வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன. நூலக வாசகா் வட்ட தலைவா் ப.இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வ... மேலும் பார்க்க

கலப்பட டீசல் விற்பனையை அரசு தடுக்க வேண்டும்: ரிக் உரிமையாளா்கள் சம்மேளனம் கோரிக்கை

திருச்செங்கோடு: கலப்பட டீசல் விற்பனை அரசு தடுத்த நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது என ரிக் உரிமையாளா்கள் சம்மேளன கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ரிக் வாகன உரிம... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 2 ஆவது வாா்டு சண்முகபுரம் பகுதியில் கழிவுநீா் வடிகால் வசதி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி, இரண்டாவது வாா்டு, சண்ம... மேலும் பார்க்க

அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திண்டுக்கல் சி.சீனிவாசன்

நாமக்கல்: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது என்று அக்கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினாா். நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்... மேலும் பார்க்க

தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தேசிய இயற்கை தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம... மேலும் பார்க்க