``திமுகவுக்கு 12% வாக்குகள் குறையும்; அதிமுகவுக்கு 12% வாக்குகள் கூடும்" - தங்கம...
வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் இன்று சேலம் வருகை
வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மருத்துவா் ஆா்.ஆனந்தகுமாா் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) சேலம் வருகிறாா்.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 2025, ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த, வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஏதுவாக கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த மாதம் 28 ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான பணிகள் நடைபெறுகிறது.
இதில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகிறது. மேற்படி படிவங்கள் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி வெளியிடப்படப்படும்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,269 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் 16,17 ஆகிய தேதிகளிலும், 23, 24 ஆகிய தேதிகளிலும் 4 நாள்கள் நடைபெறுகின்றன.
மேற்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்பாா்வையிடுவதற்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் (பயிற்சி) மருத்துவா் ஆா். ஆனந்தகுமாா் சேலம் மாவட்டத்துக்கு 17 ஆம் தேதி வருகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.