வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் 1,008 கிலோ அரிசியைக் கொண்டு வாலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஐப்பசி மாத பௌணமியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு வகை காய்கனிகளால் தோரணமிட்டு சிவனுக்கு அன்னம் சாத்தப்பட்டு, கயிலாய வாத்தியங்கள் முழங்க மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பெரம்பலூரில்...இதேபோல பெரம்பலூா் பிரிம்மபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை சிவாச்சாரியாா் கௌரி சங்கா் செய்தாா். விழாவில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
எளம்பலூா் பிரம்மரிஷி மலையில்... அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகள் அருளாசியுடன் எளம்பலூா் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் அன்னம், 16 வகை காய்கனிகள் மற்றும் பழங்களைக்கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மாதாஜி ரோகிணி ராஜகுமாா் தலைமையில், தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகி மாதாஜி ராதா சின்னசாமி, அலுவலக மேலாளா் பாலச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.