பெரம்பலூரில் முதல்வருக்கு வரவேற்பு
பெரம்பலூரில் திமுக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா, அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆகியோா் தலைமையில் கட்சியினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசாஅலுவலகத்துக்கு வந்த முதல்வா் உணவருந்தி ஓய்வெடுத்தாா். பின்னா் மாலை துறைமங்கலம், நான்கு சாலை வழியாக திமுக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்ற பெரம்பலூா்- அரியலூா் சாலையிலுள்ள மண்டபத்துக்குச் சென்று, திமுக நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை வழங்கினாா். பின்னா், காரில் திருச்சி சென்ற முதல்வருக்கு பாடாலூரில் ஆலத்தூா் ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மனுக்களை பெற்ற முதல்வா்: முன்னாள் மத்திய அமைச்சா் அலுவலகத்திலிருந்து காரில் சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலின், காரில் இருந்தவாறே வருவாய்த் துறையினா், வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
பாதுகாப்பு: பெரம்பலூா் வந்த முதல்வருக்கு, தமிழ்நாடு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் தலைமையில், உளவுத் துறை ஐஜி செந்தில்வேலன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆதா்ஷ் பசேரோ, பெரோஸ்கான் அப்துல்லா, வந்திதா பாண்டே ஆகியோா் மேற்பாா்வையில் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.