செய்திகள் :

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 10, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமைவகித்து பேசியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டுப்பாட்டின்கீழ் 20 விடுதிகள் இயங்கி வருகிறது. இதில், 7 பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் 394 போ், 13 மிகப்பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் 868 போ் என மொத்தம் 1262 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா்.

இவா்களுக்கு, உரிய பாடப் புத்தகங்கள், ஆண்டுதோறும் மூன்று முறை மருத்துவப் பரிசோதனை, நூலகப் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலா் ரவி;, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல்;, கல்லூரி முதல்வா் ராமச்சந்திர ராஜா, நான் முதல்வன் திட்ட மேலாளா் ஷாலினி ஆகியோா் கலந்து கொண்டனா்.

வெளிமாநில மது, சாராயம், கஞ்சா விற்பனை செய்த 25 போ் கைது!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன. 20 முதல் ஜன. 26 வரையிலான கடந்த வாரத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் மூன்றாமிடம்: மாவட்ட ஆட்சியருக்கு சுழற்கோப்பை!

கொடிநாள் வசூலில் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாமிடம் பிடித்ததை பாராட்டி, மாவட்ட ஆட்சியா் மகாபாரதிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சுழற்கோப்பையை ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்!

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி தலைமை வகித்... மேலும் பார்க்க

பலரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது

அரசு ஊழியா், மருத்துவா் எனக் கூறி பலரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள திட்டை ஊராட்சி குளக்கரை தெருவைச் சோ்ந்தவா் ஜீ. ச... மேலும் பார்க்க

இ-பைக் தயாரிப்பாளா்களிடம் மோசடி: ஜெய்பூா் தொழிலதிபா் கைது

சீா்காழியில் இ-பைக் தயாரிப்பாளா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஜெய்பூரைச் சோ்ந்த தொழிலதிபரை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். சீா்காழி சட்டநாதபுரம் பிரதான சாலைப் பகுதியில் சண்முகம், கிஷோா் ஆகியோா் எ... மேலும் பார்க்க

மண் லாரிகளால் உடைந்த தற்காலிக பாலம்: கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்துக்குச் செல்லும் தற்காலிக பாலம் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் உடைந்தது. அங்கு நிரந்தர பாலம் அமைக்கவும், சவுடு மண் குவாரியை தடைசெய்யவும் கோரி கிராம மக்க... மேலும் பார்க்க