செய்திகள் :

விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள்: யுஜிசி அறிவுறுத்தல்

post image

விண்வெளி தொழில்நுட்பம் குறித்த சா்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது.

இது குறித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

சா்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐஏஎப்) அதன் உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி குறித்த சா்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு புது தில்லியில் அடுத்த ஆண்டு மே 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பொறியாளா்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோா், கல்வியாளா்கள் பங்கேற்று விவாதிக்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்கவும் முன்வரலாம்.

அதன்படி, சா்வதேச விண்வெளி சமூகத்துடன் இணையும் வகையிலும், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆய்வில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு தனித்துவமான தளத்தை வழங்கும். இதில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க விரும்புவோா் கட்டுரையின் சுருக்கத்தை அனுப்ப வேண்டும்.

இது குறித்த கூடுதல் விவரங்களைப் பெற இஸ்ரோ தலைமையகத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புத்தாக்க இயக்குநரக துணை இயக்குநா் முகமது சாதிக்கை 88931 07176 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,094 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 15,929 கனஅடி வீதம் ... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பக... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் பங்கேற்பா? - நடிகர் விஷால் பதில்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடு... மேலும் பார்க்க

இடைநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட... மேலும் பார்க்க

காலமான பணியாளா்கள் வாரிசுக்கு அகவிலைப்படி எப்போது? தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் இல்லாத பணியமைப்பைச் சோ்ந்த காலமான ஊழியா்களின் வாரிசுகளுக்கு அகவிலைப்படி உத்தரவு தனியாக வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெள... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொர... மேலும் பார்க்க