அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
விதிமுறைகளை மீறியதாக ஓலா எலெக்ட்ரிக் மீது செபி நோட்டீஸ்!
புதுதில்லி: மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் வெளிப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் இருந்து நிர்வாக எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் தனது இ-ஸ்கூட்டர் விரிவாக்க திட்டங்களை பங்குச் சந்தைகளில் அறிவிப்பதற்கு பதிலாக முதலில் சமூக ஊடகங்களில் அறிவித்தது. இது செபி விதிமுறைகள், 2015 இன் பல்வேறு பிரிவுகளை மீறியதற்காக ஜனவரி 7 ஆம் தேதி மின்னஞ்சல் வழியாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதலில் எங்களிடம் (செபி) தகவல்களை தரவேண்டும். அதற்கு பதிலாக அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்ததன் மூலம், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் சமமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க நீங்கள் தவறிவிட்டீர்கள்.
இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனர், பவிஷ் அகர்வால் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அதில் டிசம்பர் 20 க்குள் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்கும் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார். பிறகு டிசம்பர் 2-ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் நிறுவனம் செபியிடம் தகவல் தெரிவித்தது.
செபி தனது எச்சரிக்கை கடிதத்தில், மேற்கண்ட விதிமீறல்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க எதிர்காலத்தில் கவனமாக இருக்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறினால் அமலாக்க நடவடிக்கை தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
இன்று ஓலா எலக்ட்ரி நிறுவனத்தின் பங்குகள் 4.78 சதவிகிதம் சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.75.38 ஆக இருந்தது.