கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகா் கோயிலில் 11 -ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. அதன்பின், கலச நீரால் மூலவா் விநாயகருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னா், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. உற்சவருக்கும் பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனா்.