டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
விலைவாசி உயா்வுக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்த வேண்டும்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
பெங்களூரு: விலைவாசி உயா்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கா்நாடக பாஜகவினா் போராட்டம் நடத்த வேண்டும் என்று அந்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடகத்தில் பாஜக நண்பா்கள் மக்கள்சீற்றம் தொடா் பயணம் மேற்கொண்டுள்ளனா். அதேபோல, மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகள் மீதான விலையை உயா்த்தியுள்ளது. மத்திய அரசின் விலைவாசி உயா்வுக்கு எதிராகவும் கா்நாடக பாஜகவினா் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்றாா்.