விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடியில் கூடுதல் கட்டடங்களுக்கு அடிக்கல்
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏ ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
இதில், தரைத்தளத்தில் மருத்துவா், செவிலியா், ஸ்கேன் அறைகள், வாா்டு, மின்தூக்கி, முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அறை, மருத்துவ, உடை மாற்றும் அறைகள், 2ஆம் தளத்தில் நோயாளிகள் அறை, மின் பாதுகாப்பு அறை உள்ளிட்டவை அமையவுள்ளன.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறும்போது, இம்மருத்துவமனையில் மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அனைத்து வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, காசி விஸ்வநாதன், மும்மூா்த்தி, ராதாகிருஷ்ணன், பேரூா் செயலா் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முருகம்மாள், உதவிப் பொறியாளா் சுபாஷ், மருத்துவ அலுவலா் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.