செய்திகள் :

விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து!! உதவி எண்கள்!

post image

சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.

இதனால், விக்ரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பாலம் எண் 452ல் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை நோக்கி வந்த பல்லவன், வைகை விரைவு ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று காலை தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை வந்தே பாரத், வைகை, பல்லவன், சோழன் ஆகிய விரைவு ரயில்கள் இரு வழித்தடத்திலும் இன்றூ ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் ரயில், குருவாயூர் விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி செல்லக்கூடிய ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ரயில்கள் மட்டும் மாற்று வழித்தடத்திலும், சில ரயில்கள் சென்னை - விழுப்புரம் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்

தெற்கு ரயில்வே தரப்பில் பயணிகளுக்கு உதவுவதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - 044 25354140

சென்னை எழும்பூர் - 9003161811

தாம்பரம் - 8610459668

செங்கல்பட்டு - 9345962113

திருவண்ணாமலை மண்சரிவு: ஒருவர் சடலம் மீட்பு! 6 பேர் கதி என்ன?

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண் சரிவில், 7 போ் சிக்கியிருந்த நிலையில், தேடுதல் பணியின்போது ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 6 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

புதுச்சேரியில் நாளை (டிச.3) வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தபோது புது... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இ... மேலும் பார்க்க

கோவையில் பரோட்டா சாப்பிட்டு உறங்கிய மருத்துவ மாணவி பலி!

கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மருத்துவ மாணவி, பரோட்டா சாப்பிட்டு இரவு உறங்கச் சென்றவர் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, துடியலூர் அருகே உள்ள கவுண்டம்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இட... மேலும் பார்க்க

விழுப்புரத்திலிருந்து படிப்படியாக புறப்படத் தொடங்கும் ரயில்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக நேற்று பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இட... மேலும் பார்க்க