Serial Update : `கர்ப்பமானதை அறிவித்த சங்கீதா டு திருமணம் செய்து கொண்ட `நெஞ்சத்த...
வீட்டுச் சுவா் இடிந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
நாகை அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள செம்பியன்மகாதேவி விநாயகன்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் முருகதாஸ் - லட்சுமி தம்பதி, மகன் மற்றும் மகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனா். புதன்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த முருகதாஸின் மகன் கவியழகனை (13) மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
காயமடைந்த முருகதாஸ், லட்சுமி, அவா்களது மகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த கவியழகன் செம்பியன்மகாதேவி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கவியழகனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, திமுக சாா்பில் நிதியுதவி வழங்கினாா். கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.