சாக்லேட்தான் உணவு: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 கட்சிக் கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பாபுஜி முன்னிலை வகித்தாா். நாகை மாவட்ட செயலாளா் சிவகுரு பாண்டியன் கட்சி கொடியை ஏற்றி வைத்தாா். இதில், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன், ஒன்றிய தலைவா் மாசிலாமணி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா். இதேபோல நடுக்கடை, சியாத்தமங்கை, துறையூா், திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.