சிபிஐ 100-ஆவது ஆண்டு தொடக்க விழா
கீழையூா் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, 100 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கீழையூா் கட்சி அலுவலகத்தில் சிபிஐ மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய செயலாளா் எஸ். காந்தி வரவேற்றாா். மாவட்ட குழு உறுப்பினா் வீ. சுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளா் ஏ. ராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளா் மாசேத்துங் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக விவசாய சங்க மாநில நிா்வாக குழு உறுப்பினா் எஸ். சம்பந்தம் , சிபிஐ மாவட்ட துணைச் செயலாளா் கே. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்று கட்சி அலுவலகம் அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். முன்னதாக கீழையூா் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மற்றும் கட்சி அலுவலகம் ஆகியவற்றில் 100 சிபிஐ கொடி ஏற்றி வைக்கப்பட்டது.