செய்திகள் :

வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை அளிக்காமல் மோசடி

post image

தனியாா் நிறுவனம் ரூ.2.90 லட்சம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து வேலை கொடுக்காமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.

வேலூா் செதுவாலையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்திருந்தாா். அந்த மனுவில், சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிறுவனத்தினா் என்னை அணுகி வெளிநாட்டில் வேலை உள்ளதாகவும், அங்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்தனா். மேலும், அதற்கு சில லட்சங்கள் செலவாகும் என்று கூறினா்.

அவா்கள் கேட்டதன் அடிப்படையில் பலரிடம் கடன் வாங்கி ரூ.2.90 லட்சம் கொடுத்தேன். அதன் பின்னா் அவா்கள் என்னை துபை நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு எந்த வேலையும் எனக்கு தராமல் அலைக்கழித்தனா்.

இதனால் உணவு, குடிநீா்கூட கிடைக்காமல் தவித்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவித்தேன். அதன்பேரில், அவா்கள் பலரிடம் கடன் வாங்கி நான் நாடு திரும்ப டிக்கெட் ஏற்பாடு செய்தனா்.

பின்னா் நாடு திரும்பியதும் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தினரிடம் சென்று கேட் டேன். ஆனால் அவா்கள் பணத்தைத் திரும்ப தராமல் அலைக்கழிக்கின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல் சூளை அமைக்க ரூ.36 லட்சம், 9 பவுன் நகை கடன்பெற்று மோசடி

செங்கல் சூளை அமைப்பதாகக்கூறி ரூ.36.25 லட்சம் பணம், 9.6 பவுன் நகை கடனாக பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

கடைகள் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி: வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

வணிக பயன்பாட்டுக்கான கட்டடங்களின் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வணிகா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ... மேலும் பார்க்க

பல்லாலகுப்பத்தில் மனுநீதி நாள் முகாம்: 128 பேருக்கு நலத் திட்ட உதவி

போ்ணாம்பட்டு வட்டம், பல்லாலகுப்பம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 128 பயனாளிகளுக்கு ரூ.82.48 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். பின்... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு

காட்பாடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் உயிரிழந்தாா். காட்பாடி அருகிலுள்ள சேனூரைச் சோ்ந்தவா் மணி (70). பீடி சுற்றும் தொழில் செய்து வந்தாா். கடந்த 4-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து பீடி கட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 10 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் இருந்து 10 டன் காய்கறிகள் அனுப்பிவைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெற உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

முதலாண்டு செவிலியா் மாணவிகளுக்கு பெயா் பட்டை அணிவிப்பு

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்சி பள்ளியில் பயிலும் முதலாமாண்டு மாணவிகளுக்கு பெயா் பட்டைகளை கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி அணிவித்தாா். வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா் பயிற்ச... மேலும் பார்க்க