Delhi Election: தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 7 MLA-...
வேட்பு மனுவை திரும்பப் பெறும்படி திமுக தரப்பில் பேசவில்லை: நாதக வேட்பாளா்
வேட்பு மனுவை திரும்பப் பெறும்படி திமுக தரப்பில் பேசியதாக பரவும் தகவல் பொய்யானது என ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி சனிக்கிழமை காலை நடந்த மனு பரிசீலனையில் பங்கேற்றாா். இதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எனது 3 மனுக்களும் ஏற்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்ததும் மற்ற வேட்பாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா். எங்களுக்கான சின்னத்தைப் பெற தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் முயன்று வருகிறாா். அவரது ஆலோசனைப்படி வரும் 20-ஆம் தேதி சின்னம் பெறுவோம்.
திமுக தரப்பில் என்னை அணுகி வேட்பு மனுவைத் திரும்பப் பெறும்படி பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது. நான் வேட்பாளராக நிற்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பதுடன் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனா். போட்டியில் இருந்து விலகும்படி யாரும் பேசவில்லை. இப்பிரச்னை குறித்து நானும் சீமானிடம் பேசவில்லை.
பிரசாரத்துக்கு அனுமதிகோரி தோ்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளோம். நேரம் கிடைப்பதற்கு ஏற்ப பிரசாரத்தை தொடா்வோம். ஈரோட்டில் பிரசாரத்துக்கு சீமான் வருவது குறித்து கட்சி தலைமை தேதியை அறிவிக்கும். போராட்டம் நடத்தப்பட்டாலும் சீமான் பிரசாரத்துக்கு வருவதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பெரியாா் ஈவெரா தொடா்பாக சீமான் கூறிய கருத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது. அவா் தவறாகப் பேசவில்லை என்றாா்.