செய்திகள் :

ஈரானில் 3 இந்தியர்கள் மாயம்!

post image

ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ஈரான் நாட்டிற்கு வணிக ரீதியாக பயணம் மேற்கொண்ட மூன்று இந்தியர்கள் அந்நாட்டில் தரையிறங்கிய பின்னர் அவர்களது குடும்பத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: நாளைமுதல் யுபிஐ செயல்படாது? யாருக்கெல்லாம்?

இதனைத் தொடர்ந்து, 3 இந்தியர்கள் மாயமானது குறித்து தில்லியிலுள்ள ஈரான் நாட்டின் தூதரகத்திற்கும், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், ஈரானிலுள்ள இந்திய தூதரகமும் மாயமான இந்தியர்களின் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈரான் அதிகாரிகளின் உதவியைக் கேரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

சென்னை: நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 5.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்... மேலும் பார்க்க

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்ற... மேலும் பார்க்க

முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி கேள்வி

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணி அதிகாரியை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுத... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள்' - திருமாவளவன்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம... மேலும் பார்க்க